"அதானி போட்ட அறிவிப்பு.." - பிரியங்கா காந்தி கடும் குற்றச்சாட்டு

x

அதானியின் அறிவிப்பால் இமாச்சலப் பிரதேசத்தில் ஆப்பிள் விலை கடுமையாக சரிந்துள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், இமாச்சல் மக்களுக்கு ஏற்கனவே மலை போன்று பிரச்சினைகள் இருக்கும் போது, பிரதமரின் நண்பர் அதானி பிரச்சினைகளை கூட்டுவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதானி விலையை அறிவித்த பிறகு, ஆப்பிள் பெட்டிகள் முந்தைய விலையில் மூன்றில் ஒரு பங்குக்கு விற்கப்படுவதாக கூறியுள்ளார். பேரிடர் காலங்களில் இதுபோன்று செய்வது வெட்க‌க்கேடானது என விமர்சித்துள்ள பிரியங்கா காந்தி, இந்த கொள்ளையை தடுக்க பிரதமர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்