Brics | PM Modi | Iran | "டாலருக்கு நோ..?" இந்தியாவுக்கு ரத்தின கம்பளம்.. கைகோர்த்த ஈரான்

"டாலருக்கு நோ..?" இந்தியாவுக்கு ரத்தின கம்பளம்.. கைகோர்த்த ஈரான்

Brics | PM Modi | Iran | "டாலருக்கு நோ..?" இந்தியாவுக்கு ரத்தின கம்பளம்.. கைகோர்த்த ஈரான்

பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு இடையே, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான் ஆகியோர் உயர்மட்ட இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினர். ​இந்த சந்திப்பில், இருநாடுகளிடையேயான வர்த்தக விரிவாக்கம், முதலீடு, நிதிச் சவால்கள் மற்றும் சபாஹார் துறைமுகம் வழியாக ஆசிய நாடுகளுடனான போக்குவரத்து தொடர்பை மேம்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

அப்போது வரலாற்றுப் பண்பாட்டுத் தொடர்பு கொண்ட இந்தியா-ஈரான் உறவு, பிரிக்ஸ் கூட்டமைப்பு மூலம் மேலும் விரிவடையும் என இரு தலைவர்களும் நம்பிக்கை தெரிவித்தனர். முன்னதாக பேசிய ஈரான் அதிபர், உலக அளவில் ஒருதலைப்பட்சமான பொருளாதார ஆதிக்கத்தை குறைக்கவும், அமெரிக்க டாலருக்கு மாற்றாகப் பிரிக்ஸ் நாடுகளின் உள்நாட்டுப் பணப் பயன்பாட்டை அதிகரிக்கவும் வலியுறுத்தினார்.

#BRICS #PMModi #Iran #thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com