``மின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை'' - அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

x

தமிழகத்தில் கோடைகால மின் தேவை அதிகரிக்கவில்லை எனவும் காற்றாலை மின் உற்பத்தி தொடங்கி இருப்பதால் மின் பற்றாக்குறை ஏற்படவும் வாய்ப்பில்லை என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் நுகர்வோர் சேவை மையத்தை மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் சேவை மையத்தில் அளிக்கப்பட்ட35 லட்சத்து 16,155 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.மேலும், திருநெல்வேலியில் மின் தடை ஏற்பட்ட மின் மயானத்தில் 2 மணி நேரத்தில் மின் இணைப்பு வழங்கப்பட்டது என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்