TN Assembly| ``வாய்ப்பில்லை’’ -சட்டப் பேரவையில் ரத்தாகிறதா?
#tnassembly #cmvijayvsudhayanidhistalin #dmkvstvk தமிழக சட்டசபையின் குளிர்கால கூட்டத் தொடர் ரத்தாகிறதா? தமிழக சட்டசபையின் குளிர்கால கூட்டத் தொடர் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை எனச் சட்டசபை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி நிதியமைச்சர் மரிய வில்சன் திருத்திய முழு பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அதன்பின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெற்று, கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடைந்தது. விதிகளின்படி ஆறு மாத இடைவெளியில் சட்டசபை கூட்டப்பட வேண்டும் என்ற நிலையில், கடந்த கூட்டத் தொடர் முடிந்து இரண்டு மாதங்கள் மட்டுமே ஆகியுள்ளது. மேலும், வழக்கமாக நவம்பர் அல்லது டிசம்பரில் சட்டசபை கூட்டம் 3 அல்லது 4 நாட்கள் கூட்டப்படும், அப்போது துணை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்படும். ஆனால் கடைசியாக சட்டசபை கூடி 2 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில், துணை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யவும் வாய்ப்பில்லை என்று சட்டசபை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. மறுபுறம், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு, விலைவாசி உயர்வு, மின்சாரப் பிரச்சினை, அரசு நூலகங்களில் போலி புத்தக விவகாரம், குழந்தைகள் மாயம் மற்றும் ஆளும் கட்சியினர் மீதான புகார்கள் எனப் பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளன. இந்தச் சூழலில், குளிர்கால கூட்டத் தொடர் தவிர்க்கப்பட்டு, அடுத்த சட்டசபை கூட்டத் தொடர் வரும் ஜனவரி மாதம் ஆளுநர் உரையுடன் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
