"பாஜகவுடன் கூட்டணி இல்லை" - த.வெ.க துணை பொதுச் செயலாளர்
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப்படி, பாஜகவுடன் எப்பொழுதும் கூட்டணி இல்லையென, அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். சென்னை , போயஸ் கார்டனில், செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக அரசு சிறுபான்மை மக்களுக்கு துரோகம் செய்வதாகவும், வக்ஃபு நிலங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப்படி, பாஜகவுடன் எப்பொழுதும் கூட்டணி இல்லையென உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
Next Story
