என்.எம்.சி நோட்டீஸ் - அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்
தடுப்பூசி செலுத்துவதில் 99 சதவீதம் தொடர்ந்து நிறைவேற்றி தமிழ்நாடு மகத்தான சாதனை செய்து வருவதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார். சென்னை தியாகராய நகரில் உள்ள நகர்புற நல்வாழ்வு மையத்தில், தடுப்பூசி சேவைகள் விரிவாக்கத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், என்.எம்.சி நோட்டீஸ் எல்லா ஆண்டும் கொடுக்கப்படுவது வழக்கம் என்றும், பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், தேசிய தர நிர்ணய ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்தார்.
Next Story
