நிர்மலா சீதாராமன் சென்னை விசிட் எதிரொலி? அவசரமாக டெல்லி புறப்பட்ட தமிழக பாஜக VIPகள்
தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் உட்பட முன்னாள் தலைவர்கள் டெல்லி பயணம்
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரே வாரத்தில் 2 முறை சென்னை வந்திருந்தார். அப்போது கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் தமிழக பாஜக தலைவர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அப்பொழுது வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பல கட்சிகளை புதிதாக இணைக்க வேண்டும் என ஆலோசனைகளை வழங்கி இருந்தார்.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், எச் ராஜா ஆகியோர் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெறும் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். மேலும் டெல்லியில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுப்பார்கள் என்று கூறப்படுகிற்து.
