விழாக்கோலம் பூண்ட பிரச்சார கூட்டம்.. டிரம்ஸ் வாசிக்க வாசிக்க குத்தாட்டம் போட்ட தொண்டர்கள்

x

விழாக்கோலம் பூண்ட பிரச்சார கூட்டம்.. டிரம்ஸ் வாசிக்க வாசிக்க குத்தாட்டம் போட்ட தொண்டர்கள் - அதிமுக வேட்பாளருக்கு தடபுடல் வரவேற்பு

நீலகிரி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலின் மகனுமான லோகேஷ் தமிழ்ச்செல்வன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கூடலூரில் தனது வாக்கு சேகரிப்பை தொடங்கிய அவர், தமிழக எல்லை வரை 19 இடங்களில் தொடர்ச்சியாக பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிகழ்வின் போது ஏராளமான பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். மேலும், சுமார் 30-க்கும் மேற்பட்ட டிரம்ஸ் கலைஞர்கள் இணைந்து வாத்தியங்கள் முழங்க நடனமாடினர். இதனால் அப்பகுதி விழாக்கோலம் போல் காட்சியளித்தது.


Next Story

மேலும் செய்திகள்