சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்கள் - அமைச்சர் நாசர் விளக்கம்

x

சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்கள் - அமைச்சர் நாசர் விளக்கம்

மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கான நலத்திட்டங்கள், சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்கள் குறித்து அமைச்சர் நாசர் சட்டப்பேரவையில் எடுத்துரைத்தார். நடப்பு நிதியாண்டில் இலங்கை தமிழர்களுக்கு மூன்றாம் கட்டமாக மூவாயிரம் வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே இரண்டு கட்டங்களாக வீடுகள் கட்டப்பட்டு, பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், இஸ்லாமியர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ளவும், கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்லவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்