அமைச்சர் பதவி ராஜினாமா - பொன்முடி, செந்தில் பாலாஜி இல்லங்களில் உடனே அகற்றப்பட்ட பெயர் பலகை
சட்டப்பேரவையில் அமைச்சர்கள் இருக்கையில் இருந்து செந்தில் பாலாஜி, பொன்முடி பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. பொன்முடிக்கு முதல் வரிசையிலும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 2வது வரிசையிலும் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்ட நிலையில், இருவரது இருக்கையிலும் இருந்து அவர்களது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
புதிதாக அமைச்சர் பதவியேற்ற உடன், அமைச்சர்களின் வரிசைப் பட்டியல் படி இருக்கைகள் மாற்றி அமைக்கப்படும் என தெரிகிறது.
Next Story
