#BREAKING || தலைநகரில் ஒரு வாரமாக நீடிக்கும் பதற்றம்.. போராட்டக்காரர்கள் வழியில் மாற்றமா?
டெல்லிக்குள் விவசாயிகளை அனுமதிக்க மறுப்பதால் ரயில்களில் செல்ல முடிவு என தகவல். விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்க போலீசார் ரயில்களை கண்காணிக்க தொடக்கம். மத்திய அரசுடன் நடைபெற்ற 4 கட்ட பேச்சுவார்த்தையில் எந்த தீர்வும் எட்டாத நிலையில், நாளை பேரணி தொடங்குவதாக அறிவிப்பு. கடந்த ஒரு வாரமாக பஞ்சாப் - ஹரியானா எல்லையான ஷம்புவில் முகாமிட்டுள்ள விவசாயிகள். விவசாயிகள் போராட்டம் தொடர்புடைய 177 சமூக ஊடக கணக்குகளை தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முடக்கியுள்ளதாக தகவல். 'டெல்லிக்கு செல்வோம்' என்ற பெயரில் விவசாயிகள் நாளை மீண்டும் பேரணியை தொடங்க உள்ளனர்.
Next Story
