புதிய பேருந்து நிலைய பணி - அமைச்சர் ஆய்வு

x

சிதம்பரத்தில் நடைபெற்று வரும் புதிய பேருந்து நிலைய பணிகளை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கையில் கட்டுடன் வந்து ஆய்வு செய்தார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பழைய பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு, புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக 28 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், கட்டுமானப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். செய்தியாளர்களை சந்தித்த அவர், சிதம்பரம் நகரம் குறுகிய வட்டத்தில் இருப்பதால் விரிவாக்க பணி நடைபெறுவதாகவும் அதனால் தான் லால்புரம் ஊராட்சியை சிதம்பரம் நகராட்சியோடு இணைக்கப்பதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்