MGR, ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை போட்டு வணங்கிய நயினார்
வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி போய்விடும் என்ற பயம் திமுகவுக்கு வந்துவிட்டதாக பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருச்சி பெருங்கோட்ட பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சி தஞ்சாவூரில் நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்றார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜகவை பல மாநிலங்களில் வெற்றி பெற வைத்தவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா என்று கூறினார். மேலும், அதிமுக பாஜக கூட்டணியை வீழ்த்த முடியாது என்பதால் ஆட்சி போய்விடும் என்ற பயம் முதல்வருக்கு வந்துவிட்டதாக கூறினார்.
Next Story
