"கோயில்களில் இதை செய்வீர்களா?" கண்களில் நெருப்பு தெறிக்க சீமான் ஆவேசம்..
இஸ்லாமிய பெருமக்களின் கடும் எதிர்ப்பை மீறி வலுக்கட்டாயமாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃபு வாரியச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது.இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்று வரும் ஆர்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சார்ந்த மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் பங்கேற்று உள்ளனர்.நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஆர்பாட்டம் நடைபெற்று வருவதால் ஏராளமான காவலர்கள் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Next Story
