Narayanaswamy | Congress | "காங்கிரஸ் தலைமையில் தான் கூட்டணி.." - அழுத்தி சொன்ன நாராயணசாமி
புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி வலுவாக இருப்பதாக, முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கடந்த காலத்தைப் போன்று காங்கிரஸ் தான் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் என கூறியுள்ள அவர், தேர்தலை மனதில் வைத்து திடீர் திடீரென திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்படுவதாக விமர்சித்தார். கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் எனவும் நாராயணசாமி கூறியுள்ளார்.
