Puducherry Politics | புதுச்சேரி அரசு மீது நாராயணசாமி குற்றச்சாட்டு

x

புதுச்சேரியில் வரியில்லா பட்ஜெட் என்று கூறி விட்டு தற்போது அனைத்து கட்டணங்களையும் உயர்த்தியிருப்பது மக்களை ஏமாற்றும் செயல் என்று அம்மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த‌ அவர்,

வரியில்லா பட்ஜெட் என்று கூறிவிட்டு பேருந்து கட்டணம், பெட்ரோல் - டீசல் வரி, கலால் வரி, பத்திரப்பதிவு கட்டணம் ஆகியவற்றை முதல்வர் ரங்கசாமி உயர்த்தி உள்ளார் என்று தெரிவித்தார். மாநிலத்தில், என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு, தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்