"உயர்நீதிமன்ற தீர்ப்பால் ஒடுக்கப்பட்டு உள்ளார் கிரண்பேடி" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கருத்து

புதுச்சேரி மாநிலத்தை ஆட்டி படைக்க வேண்டுமென நினைத்த கிரண்பேடியை, உயர்நீதிமன்ற தீர்ப்பு ஒடுக்கி இருக்கிறது என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
"உயர்நீதிமன்ற தீர்ப்பால் ஒடுக்கப்பட்டு உள்ளார் கிரண்பேடி" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கருத்து
Published on
புதுச்சேரி மாநிலத்தில் துணை நிலை ஆளுநர் மற்றும் அமைச்சரவைக்கு இடையே உள்ள அதிகார மோதலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் என உச்சநீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர்களுக்கு பாராட்டு விழா அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகம் சார்பில் புதுச்சேரி தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டு வழக்கறிஞர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி மாநிலத்தை ஆட்டி படைக்க வேண்டுமென நினைத்த கிரண்பேடியை, உயர்நீதிமன்ற தீர்ப்பு ஒடுக்கி இருக்கிறது என்று கூறினார். பதவியில் இருந்துகொண்டே உரிமையை விட்டுக்கொடுப்பதைவிட, ஆட்சியில் இல்லாமலேயே போகலாம் எனவும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com