Nanjil sampath | குடும்ப பெண்களை நாயுடன் ஒப்பிட்டு பேசி சர்ச்சையில் சிக்கிய நாஞ்சில் சம்பத்
குடும்ப பெண்களை நாயுடன் ஒப்பிட்டு பேசி சர்ச்சையில் சிக்கிய நாஞ்சில் சம்பத்
திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் குடும்ப பெண்களை நாயுடன் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் திமுக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் நாஞ்சில் சம்பத் பேசியது பெண்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அரசியலில் ஈடுபடும் ஆண்களுக்கு உறுதுணையாக பெரும்பாலான பெண்கள் இருப்பது இல்லை, தனக்கும் அதே நிலை தான் என நாஞ்சில் சம்பத் பேசியுள்ளார். மேலும், வீடுகளில் நாய்கள் ஜாக்கிரதை என போட்டிருப்பார்கள். அதை, ஏன் நாய் ஜாக்கிரதை என போடாமல் நாய்கள் என போடுவது மற்றொரு நாய் இந்த வீட்டில் இருப்பதை குறிப்பதற்காக என குடும்ப பெண்களை குறிப்பிட்டு நாஞ்சில் சம்பத் பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது..
Next Story
