நக்கீரன் கோபால் கைதுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்

நக்கீரன் கோபால் கைதுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நக்கீரன் கோபால் கைதுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்
Published on

நக்கீரன் கோபால் கைதுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சரை ஆளுநர் மாளிகைக்கே அழைத்து நக்கீரன் கோபாலை கைது செய்ய சொன்னதாக குறிப்பிட்டுள்ளார். கோபால் மீதான வழக்கை நிபந்தனையின்றி திரும்பப் பெறவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுபோல, அடக்குமுறையின் உச்சம் என விமர்சித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், நக்கீரன் கோபாலை விடுதலை செய்யுமாறு வலி​யுறுத்தியுள்ளார். மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் நக்கீரன் கோபால் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com