நாகையில் முதல்வர் ஸ்டாலின்... மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

x

நாகையில் முதல்வர் ஸ்டாலின்... மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

நாகை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு திமுகவினர் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். நாகை சென்றுள்ள முதல்வர், திமுக மாவட்ட செயலாளர் கௌதமன் இல்ல திருமண விழாவில் பங்கேற்கிறார். தொடர்ந்து, நாகை அரசினர் தொழிற்பயிற்சி வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் 38,956 பயனாளிகளுக்கு 200 கோடியே 27 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார். மேலும், பல்வேறு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், கட்டி முடிக்கப்பட்ட பணிகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்