``சட்டமன்றத்தை நோக்கி எனது யாத்திரை..’’ - நயினார் நாகேந்திரன்

x

சட்டமன்றத்தை நோக்கி செல்வது தான் தனது யாத்திரை என, பா.ஜ.க மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். மதுரை வண்டியூர் அம்மா திடலில், ஜூன் 22ம் தேதி, இந்து முன்னணி அமைப்பின் சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதன் பூமிபூஜை நிகழ்வில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை நடைபயண யாத்திரை நடத்தியதாகவும், சட்டமன்றத்தை நோக்கி, எல்லா எம்.எல்.ஏ.க்களையும் அழைத்துக்கொண்டு போவது தான் தனது யாத்திரை என்றும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்