

யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று முழங்கும் பிரதமர், குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டுவர வேண்டிய கட்டாயம் என்ன? என திமுக எம்.பி. டி.ஆர். பாலு கேள்வி எழுப்பியுள்ளார். மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் பேசிய அவர், 2022-குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்ற அறிவிப்பு எவ்வாறு சாத்தியம் என வினவினார். பயிர்க் கடன், பயிர் காப்பீடு விளை பொருளுக்கு உரிய விலை ஆகியவை கிடைப்பதில்லை என சுட்டிக்காட்டிய டி.ஆர். பாலு, புயல் தாக்குதலுக்கு உரிய மீட்பு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார். பொங்கல் கொண்டாட்டத்தின் போது, காவிரி டெல்டாவில் ஹைட்ரோகார்பன் எடுக்க, அமைச்சர் டெண்டர் விடுக்கிறார் என எம்.பி. டி.ஆர். பாலு பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.