டிரம்ப் முன்னே பிரதமர் மோடி சொன்ன வார்த்தை - கொந்தளித்த ராகுல்

x

அதானியின் ஊழலை அயல் நாட்டிலும் பிரதமர் மோடி மூடி மறைப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்காவில் அதிபர் டிரம்புடன் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, அதானி குறித்த கேள்விக்கு, இரு நாடுகளின் தலைவர்கள் சந்திக்கும் போது தனிநபர் விவகாரங்கள் பற்றி உரையாடுவதில்லை என பதில் அளித்தார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உள்நாட்டில் அதானி விவகாரம் குறித்து கேள்வி கேட்டால் மௌனம் காக்கும் பிரதமர் மோடி, அயல்நாட்டில் தனி நபர் விவகாரம் என மூடி மறைத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பிரதமர் மோடியை பொறுத்தவரை நண்பரின் பாக்கெட்டை நிரப்புவது தான் தேசத்தை கட்டமைப்பது எனவும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்