PM Modi | Isreal | "மோடி..மோடி..மோடி.." - இஸ்ரேல் நாடாளுமன்றம் அதிர ஒலித்த கோஷம்
இந்தியா-இஸ்ரேல் உறவுகளை வலுப்படுத்திய பிரதமர் மோடியின் மிக உயரிய கௌரவ பதக்கம் வழங்கப்பட்டது. இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்திய தலைவர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ள நிலையில், இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் அவர் தனது உரையை முடித்ததும் அனைத்து எம்பிக்களும் எழுந்து நின்று கைதட்டி அவரை பாராட்டினர். இதைத் தொடர்ந்து, தனது உரையை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி, இஸ்ரேல் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் உரையாடினார். அப்போது அவருடன் செல்பி எடுத்துக் கொள்ள இஸ்ரேல் எம்பிக்கள் பலரும் ஆர்வம் காட்டினர். முன்னதாக இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றியபோது, அங்கு இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்அஜித் தோவல், மற்றும் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் இஸ்ரேலுக்கான இந்திய தூதர் ஜிதேந்திர் பால் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
