மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் புலம் பெயர்ந்தோர், ஏழை, மூத்த குடிமக்களுக்கு பயனளிக்கும் - பிரதமர் மோடி

புலம் பெயர்ந்தோர், ஏழை மற்றும் மூத்த குடிமக்களுக்கு பயனளிக்கும், எளிதாக பணம் பெறும் வகையில் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அமையும் என்று பிரதமர் மோடி தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் புலம் பெயர்ந்தோர், ஏழை, மூத்த குடிமக்களுக்கு பயனளிக்கும் - பிரதமர் மோடி
Published on

புலம் பெயர்ந்தோர், ஏழை மற்றும் மூத்த குடிமக்களுக்கு பயனளிக்கும், எளிதாக பணம் பெறும் வகையில் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அமையும் என்று பிரதமர் மோடி தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மீன்வளத் துறையில் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

கடுமையாக உழைக்கும் மீனவ மக்கள், நவீன தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு மற்றும் கடனுதவி திட்டங்கள் மூலம் அதிக பலன் பெறுவர் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். உணவு பதப்படுத்தும் துறையில் அதிக வாய்ப்புகளை உருவாக்கி நாடு தன்னிறைவு அடைய முக்கிய முடிவுகள் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டதாகவும் பிரதமர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com