காங்கிரசை சரமாரியாக விமர்சித்த பிரதமர் மோடி
தலைவர்களை கை விலங்கிட்டு சங்கிலியால் சிறையில் அடைத்த காங்கிரஸ் கட்சிக்கு, அரசியல் சாசனம் என்ற வார்த்தையே பொருந்தாது என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதில் உரையாற்றிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அரசியலமைப்பு என்ற வார்த்தையே காங்கிரஸ் கட்சிக்கு ஒத்து வராது என கூறிய பிரதமர், ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவின் பொருளாதார திறனை அங்கீகரிக்கத் தொடங்கியுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.
Next Story