``டிரம்ப்பை மோடி வெளிப்படையாக கண்டிக்க வேண்டும்'' - மல்லிகார்ஜுன கார்கே
தனது அன்பு நண்பர் டிரம்ப்பை பிரதமர் மோடி வெளிப்படையாக கண்டிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். மாநிலங்களவையில் ஆபரேஷன் சிந்தூர் மீதான விவாதத்தில் பேசிய அவர், பஹல்காம் பயங்கரவாத சம்பவத்திற்கு அமெரிக்கா கூட பாகிஸ்தானை தெளிவாகக் கண்டிக்கவில்லை என்று கூறினார். இந்தியா-பாகிஸ்தான் மோதலின்போது 5 ஜெட் விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டதாக டிரம்ப் கூறியதாகவும், அவை இந்திய விமானங்கள் அல்ல என்பதை பிரதமர் மோடி தெளிவுபடுத்த வேண்டும் என்று நாடு விரும்புவதாகவும் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
Next Story
