"ஓட்டு கேட்கும் போது தான் வந்தீர்கள்..?அதற்குப் பிறகு இப்போதுதான் பார்க்குறோம்..."

x

சென்னை ராயபுரம் அருகே, மின்சார பெட்டியில் இருந்து தீப்பொறி பட்டு, 5 குடிசை வீடுகள் எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து தமிழக வெற்றி கழகம் மற்றும் அதிமுக சார்பில் மக்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம்ஸ் மூர்த்தி, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்தித்தார். அப்போது ஓட்டு கேட்கும்போது தான் வந்தீர்கள், அதற்குப் பிறகு இப்போதுதான் பார்ப்பதாக, அவரிடம் மக்கள் வாக்குவாதம் செய்தனர். பின்னர் 40 வீடுகள் கட்டித் தரப்படும் என சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம்ஸ் மூர்த்தி உறுதியளித்த நிலையில், மக்கள் கலைந்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்