முதல்வர் பிறந்தநாள்.. திமுகவினர் கேக் வெட்டி கொண்டாட்டம்

x

முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, குடியாத்தம் வடக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய குழு தலைவர் சத்யானந்தம் தலைமையில், பரதராமி ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக தொண்டர்கள் முதல்வர் பிறந்தநாள் உறுதிமொழியை ஏற்று கொண்டதுடன், பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கினர். தொடர்ந்து, புனித அன்னாள் முதியோர் இல்லத்தில் முதல்வர் பிறந்தநாளை முதியோர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய திமுகவினர், முதியோர்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.


Next Story

மேலும் செய்திகள்