பட்டாசு ஆலை வெடி விபத்து - முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

x

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் 3 பெண்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். மல்லிம்பட்டியில் சின்னசாமி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு தயாரிப்பு கடையில் வேலை செய்து கொண்டிருந்தபோது, மின் கசிவால் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், கம்பைநல்லூரைச் சேர்ந்த சகோதரிகள் திருமலர், திருமஞ்சு, அதே பகுதியைச் சேர்ந்த செண்பகம் ஆகிய மூவரும் உடல் சிதறி உயிரிழந்தனர். தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் உள்ளிட்டோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில், இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 4 லட்ச ரூபாய் நிவாரண உதவி வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்