"உயிரையே கொடுக்க வேண்டிய நிலை வந்தாலும்..’’ - முதல்வர் அதிரடி

x

மொழித்திணிப்­புக்கு இடந்­த­ரா­மல், தமிழைக் காப்பதில் திமுக எப்போதும் உறுதியாக இருப்பதாக, முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், எந்த மொழி மீதும் தமி­ழர்­க­ளுக்கும், தமிழ்நாட்டிற்கும் தனிப்­பட்ட வெறுப்பு ஒரு போதும் இருந்ததில்லை என குறிப்பிட்டுள்ளார்.

தேசிய கல்­விக் கொள்கை வழி­யாக மும்­மொ­ழித் திட்டம் என்ற பெய­ரில் இந்­தி­யைத் திணிக்­கும் மத்திய பா.ஜ.க. அர­சின் சதியை உணர்ந்­து­தான் ஒட்­டு­மொத்த தமிழ்­நா­டும் அதனை எதிர்ப்பதாகவும்,

ஆடு நனை­கி­றதே என்று ஓநாய் அழுத கதை­யாக, தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையால் தென்­னிந்­திய மொழி­க­ளைப் படிக்­கின்ற வாய்ப்பு தமிழ்­நாட்டு இளைஞர்களுக்கு கிடைக்கவில்லை என ஆளுநர், புதுச்சரடு விடுவதாகவும் முதல்வர் குற்றம்சாட்டி உள்ளார்.

இந்தி ஆதிக்­கத்­தால் தனது சொந்த மாநி­லங்­க­ளி­லேயே 25க்கும் மேற்­பட்ட வட இந்­திய மொழி­கள் பேச்­சு­வழக்­கை­யும், எழுத்து வடி­வத்­தை­யும் இழந்து அழிந்து போன­தை­யும், அழிவின் விளிம்பில் இருப்பதையும் சுட்டிக்காட்டிய போது, அதனை வட­மா­நி­லங்­க­ளைச் சேர்ந்தவர்களே ஆதரித்துள்ளதாக கூறியுள்ளார்.

தென்­னிந்­திய மொழி­க­ளுக்­காக போலிக் கண்­ணீர் வடிக்­கும் ஆளு­நர், தமிழ் மொழிக்கு உரிய மரி­யாதை தரா­மல், தமிழ்த்­தாய் வாழ்த்தை அவ­மா­னப்­ப­டுத்­தி­ய­வர் என்றும், முதல்வர் ஸ்டாலின் கடுமையாக சாடி உள்ளார்.

பதவி பறிக்­கப்­பட்­டா­லும், சிறை­யில் அடைத்துச் சித்­தி­ர­வதை செய்­தா­லும், உயி­ரையே கொடுக்க வேண்­டி­யி­ருந்­தா­லும் ஆதிக்க மொழித்திணிப்­புக்கு இடம்த­ரா­மல் ஆருயிரான தமிழைக் காப்பதில் திமுக எப்போதும் உறுதியாக இருப்பதாகவும்.

இந்­தி­தான் இந்­தி­யா­வின் தேசிய மொழி என்­றும், சமஸ்கிருதமே இந்­தி­யா­வின் முதன்மை மொழி என்­றும் சொல்­லி­, இ­ரண்­டை­யும் திணிக்க நினைப்பதும், அவர்­கள் சொல்­கின்ற இரண்­டுமே வடி­கட்­டிய பொய் என்­பதையும் வரலாறு சொல்­வதாகவும், தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்