நேருக்கு நேர்.. தயாரா? முதல்வருக்கு ஈபிஎஸ் சவால்
நேருக்கு நேர்.. தயாரா?
முதல்வருக்கு ஈபிஎஸ் சவால்
தமிழக மக்களுக்கு திமுக என்ன செய்தது நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தி திணிப்பை கொண்டு வந்த காங்கிரஸ் கட்சியுடன் கை கோர்த்து விட்டு, பி.எம்.ஸ்ரீ திட்டத்தை முதலில் வரவேற்று விட்டு தற்போது எதிர்ப்பு நாடகமாடும் திமுகவுக்கு அதிமுக பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோதும், 7.5 சதவீத இட ஒதுக்கீடு, காவிரி வேளாண் மண்டலம் ஆகியவற்றை பெற்றுத் தந்து, மக்களுக்காக ஆட்சி செய்த இயக்கம், அதிமுக என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story