முதலமைச்சர் தரக்குறைவாக பேசியது மலிவான அரசியல் - ஸ்டாலின்

சேலம் மாவட்டம் சங்ககிரியில் தி.மு.க. கூட்டணியின் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சின்ராஜை ஆதரித்து, திமுக தலைவர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
முதலமைச்சர் தரக்குறைவாக பேசியது மலிவான அரசியல் - ஸ்டாலின்
Published on
சேலம் மாவட்டம் சங்ககிரியில் தி.மு.க. கூட்டணியின் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சின்ராஜை ஆதரித்து, திமுக தலைவர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். வேனில் இருந்தபடி பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், கொடநாடு கொலை குறித்து பேசினால் காது சவ்வு கிழிஞ்சிடும் என முதலமைச்சர் பழனிசாமி தரக்குறைவாக பேசியது மலிவான அரசியல் எனக் குற்றம்சாட்டினார். தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தியபோது, மோடி அரசு கண்டுகொள்ளவில்லை என ஸ்டாலின் தெரிவித்தார். நீட் தேர்வு வேண்டாம் என அதிமுக அரசு கேட்கவில்லை என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளதை ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.
X

Thanthi TV
www.thanthitv.com