MK Stalin | SIR | தமிழகம் முதல் டெல்லி வரை.. ட்வீட்டால் அதிரவிட்ட CM

x

SIR திருத்தம் குறித்து முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

வாக்குரிமை பறிப்பைத் தடுப்போம், வாக்குத் திருட்டை முறியடிப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், அவசர கதியில் செய்யப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம், மக்களின் வாக்குரிமையைப் பறித்து, பாஜகவுக்குச் சாதகமாகத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சதி என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

ஏற்கெனவே, பீகாரில் பெண்கள், சிறுபான்மையினர், பட்டியல் மற்றும் பழங்குடியின மக்கள் அதிக அளவில் நீக்கப்பட்டதாகவும், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையில் வெளிப்படைத்தன்மை இல்லாததால் சந்தேகம் எழுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தின் அடிப்படையான வாக்குரிமையைப் பறிக்கத் துணியும், ஜனநாயகப் படுகொலையை எதிர்த்துத் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்றும் அந்த பதிவில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்