MK Stalin | "கல்வியில் கவனம் செலுத்துங்கள், வேலை வாய்ப்புகளை நான் உருவாக்குவேன்" - முதல்வர் ஸ்டாலின்
தமிழக அரசின் சார்பில், கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில், தமிழகத்தில் கல்வித் துறையின் வளர்ச்சி, கல்வித் துறை சார்ந்த திட்டங்களின் விவரங்கள் விழாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கல்வி அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், மாணவர்கள் தொடர்ந்து கல்வி கற்க வேண்டும் என்றும், வேலைவாய்ப்புகளை உருவாக்க தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
Next Story
