பெண் நிர்வாகிக்கு வேட்டி கொடுக்க கூறிய அமைச்சர்

x

பெண் நிர்வாகிக்கு வேட்டி கொடுக்க கூறிய அமைச்சர்

முதலமைச்சர் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் போது, பெண் நிர்வாகிக்கு அமைச்சர் நாசர் வேட்டி அளிக்க கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், கட்சி நிர்வாகிகளுக்கு வேட்டி வழங்கப்பட்டது. அப்போது பெண் நிர்வாகி ஒருவருக்கும் வேட்டி வழங்க அறிவுறுத்திய அமைச்சர், கேரள பெண்கள் ஓணம் பண்டிகையின் போது வேட்டியை புடவையாக கட்டுவது போல கட்டிக்கொள்ளுங்கள் என கூறினார். இதனைக்கேட்டு செய்வதறியாது நின்ற பெண் நிர்வாகி, சற்று அதிர்ச்சியாகி பின்னர் சிரித்து சமாளித்து சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்