அமைச்சர் பொன்முடியிடம் சமூக ஆர்வலர் வாக்குவாதம் - பரபரப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில், புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தை அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்தார். அப்போது அங்கு வந்த சமூக ஆர்வலர் கணேஷ், பேருந்து நிலையம் அமைய உள்ள இடம் நுழைவு வாயிலில் இருந்து 600 மீட்டருக்கு அப்பால் உள்ளதால் வயதானவர்கள் செல்வதற்கு கடினம் என்று கூறினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, இதே போல் தான் விழுப்புரம் பேருந்து நிலையம் அமைக்கும் போதும் கூறினார்கள் ஆனால் இப்போது அந்த பேருந்து நிலையம் எப்படி உள்ளது என்று தெரிவித்தார். இதையடுத்து நீண்ட தூரம் நடந்து சென்று இடத்தை பார்வையிட்ட அமைச்சர் பொன்முடி, அவர் சொல்வது உண்மைதான் இவ்வளவு தூரம் எப்படி வர முடியும் என்று அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்..
Next Story
