அமைச்சர் ஐ.பெரியசாமியின் மேல்முறையீட்டு மனு.. உச்ச நீதிமன்றம் அதிரடி
வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கில் விடுவித்ததை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அமைச்சர் ஐ. பெரியசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ராஜேஷ் பிந்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் சபரீஷ் சுப்ரமணியன் ஆஜராகி, பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரியதை ஏற்ற உச்சநீதிமன்றம் 4 வார கால அவகாசம் வழங்கி விசாரணையை தள்ளி வைத்துள்ளது.
Next Story
