புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு சென்றபோது அவசரத்தில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாகவும், இனிமேல் இதுபோல் நடக்காது என அமைச்சர் தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இனிமேல் இது போல நடக்காது என நம்புவதாக தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.