இன்பநிதி பெயரில் பாசறை...அதிரடி ஆக்‌ஷன் எடுத்த அமைச்சர்

x

புதுக்கோட்டையில், இன்பநிதி பெயரில் பாசறை அமைத்து சுவரொட்டி ஒட்டப்பட்ட விவகாரத்தில், தி.மு.க நிர்வாகிகள் இருவர் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி பெயரில் பாசறை அமைத்து, வரும் 24-ம் தேதி மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என புதுக்கோட்டையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் மணிமாறன், திருமுருகன் ஆகியோர் தற்காலிகமாக நீக்கப்படுவதாக, தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்