"அதிமுக 10 ஆண்டுகளில் செய்த‌தை திமுக 4 ஆண்டுகளில் செய்து சாதனை" - அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெருமிதம்

x

அதிமுக 10 ஆண்டுகளில் செய்த‌தை திமுக 4 ஆண்டுகளில் செய்து சாதனை படைத்துள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெருமிதம் தெரிவித்துள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு கொண்டு வந்த சிங்கிள் விண்டோ போர்ட்டல் மூலம், இதுவரை 73 ஆயிரத்து 288 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 66 ஆயிரத்து 595 உரிமங்கள் வழங்கப்பட்டதாக அவர் கூறினார். கடந்த பத்தாண்டுகால அதிமுக ஆட்சியில், 55 ஆயிரத்து 230 தொழில் முனைவோரை மட்டுமே உருவாக்கியதாகவும், ஆனால், 4 ஆண்டுகளில் 59ஆயிரத்து 584 புதிய தொழில் முனைவோரை உருவாக்கி சாதனை படைத்துள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்