அறிக்கை வெளியிட்ட விஜய்யை அட்டாக் செய்த அமைச்சர் சேகர்பாபு
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிக்கை மூலம் கட்டிய மணல் கோட்டை தகர்த்து எறியப்படும் என அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜகவோடு கள்ள உறவு வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை எனக் கூறினார். ஏதோ ஒரு நாள் அறிக்கை வெளியிட்டு ஏதோ ஒருநாள் ரோடு ஷோ நடத்துபவர் அல்ல முதல்வர் ஸ்டாலின் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
Next Story
