"திமுக மீது மக்களுக்கு வெறுப்பு இல்லை"
தவெக தலைவர் விஜய் கூறுவதை போல திமுக அரசின் மீது பொதுமக்களுக்கு வெறுப்பு ஏதுமில்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். நெல் கொள்முதல் விவகாரத்தில் தமிழக அரசை விஜய் விமர்சித்தது குறித்து புதுக்கோட்டையில் கருத்து தெரிவித்த அவர், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கி நெல் கொள்முதல் செய்யப்படுவதாக பதிலளித்தார்.