Srilanka | Ditwah | "இலங்கை தமிழர்களை கண் இமை போல் பாதுகாக்கிறார் முதலமைச்சர்" - அமைச்சர் நாசர்
இலங்கை தமிழர்களைக் காக்கும் முதல்வர்- அமைச்சர் நாசர்
இலங்கை தமிழர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண் இமை போல் பாதுகாப்பதாக அமைச்சர் சா.மு. நாசர் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் அயலக தமிழர் நல வாரியத்தின் புதிய அலுவலகத்தை அமைச்சர் சா.மு. நாசர் திறந்துவைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை தமிழர்களுக்கு சிறு அசம்பாவிதமும் நடக்காத வகையில் முதலமைச்சர் கண்காணிப்பதாகவும், மழை பாதிப்பு குறித்து அங்குள்ள தமிழ்ச் சங்கம் மற்றும் அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்ததாகவும் அமைச்சர் சா.மு. நாசர் தெரிவித்தார்.
Next Story
