TVK | Parvesh | தவெக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அமைச்சர் முகமது பர்வேஸ்
Dharapuram | TVK | Parvesh | தவெக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அமைச்சர் முகமது பர்வேஸ்
#dharapuram #tvk #parvesh #thanthitv
இடைத்தேர்தல் - தாராபுரத்தில் வாக்கு சேகரித்த அமைச்சர் முகமது பர்வேஸ் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் முகமது பர்வேஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அமைச்சர் முகமது பர்வேஸ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் முஸ்தபா, சரவணன் உள்ளிட்டோர் தாராபுரம் நகரிலுள்ள சின்ன கடைவீதி, ஜின்னா மைதானம், அரசமரம் தெரு, சின்ன பள்ளி வாசல் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று இஸ்லாமிய பொதுமக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்தனர். அப்போது கடந்த 120 நாட்களில் தவெக ஆட்சியில் செய்த சாதனைகளை விளக்கும் வகையிலான துண்டு பிரசுரங்களை வாக்காளர்களுக்கு அமைச்சர் முகமது பர்வேஸ் வழங்கினார். தவெக வேட்பாளர் சத்தியபாமா தேர்தலில் வெற்றி பெற்றால், மக்களின் குறைகளை போக்க பாடுபடுவார் என்று முகமது பர்வேஸ் வாக்காளர்களிடம் உறுதி அளித்தார். மேலும் தாங்கள் வாக்கு கேட்டு செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் அமோக வரவேற்பு அளிப்பதாகவும், குறிப்பாக சிறுபான்மை மக்கள் திரண்டு வந்து தங்களுக்கு இன்முகத்துடன் ஆதரவு தெரிவித்து வருவதாகவும் குறிப்பிட்ட முகமது பர்வேஸ், முதலமைச்சர் விஜய் கடந்த 120 நாட்கள் ஆட்சியில் செய்துள்ள சாதனைகள் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
