அமைச்சர் KN நேரு தம்பியின் வாக்குமூலத்தை வீடியோ எடுத்த ED

x

சட்டவிரோத பணப்பரிமாற்ற விவகாரம் தொடர்பாக, அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி கே.என்.ரவிச்சந்திரனை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். வங்கியில் கடனாக வாங்கிய 22.48 கோடி ரூபாயை சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் செய்த விவகாரத்தில்,

பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக, கே.என்.ரவிச்சந்திரனிடம் அதிகாரிகள் விசாரணை செய்து வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்தனர். அவருக்கும் "TrueDom கம்பெனிக்கும் என்ன தொடர்பு?, "மூன்று போலி நிறுவனங்கள் யார் பெயரில் தொடங்கப்பட்டன? உள்ளிட்ட கேள்விகளுடன் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு மீண்டும் அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்