"சாதி ரீதியாக மோதலை தூண்டும் வகையில் பேசக் கூடாது" - அமைச்சர் கடம்பூர் ராஜூ

"தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது" - அமைச்சர் கடம்பூர் ராஜூ

சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றவர்கள் சாதி கலவரத்தை தூண்டும் வகையில் பேசக் கூடாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டியில் நடைபெற்ற நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கான பாராட்டு விழாவில் கலந்து கொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், எம்.எல்.ஏ.வாக இருந்து கொண்டு, மக்களிடம் பீதியை ஏற்படுத்தும் விதமாக பேசியதால் தான், கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு வந்துள்ளது என்றார். ஹெச்.ராஜா எம்.எல்.ஏ. கிடையாது என்பதால் அவரது பேச்சுக்கள் மக்களிடம் பிரதிபலிக்காது என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ குறிப்பிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com