"தமிழக அரசு மீது தேவை இல்லாத குற்றச்சாட்டை மத்தியில் இருப்பவர்கள் கூறி வருகின்றனர்"

பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்
"தமிழக அரசு மீது தேவை இல்லாத குற்றச்சாட்டை மத்தியில் இருப்பவர்கள் கூறி வருகின்றனர்"
Published on

காமராஜரின் 116 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அவரது உருவ சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், சரோஜா, பெஞ்சமின், உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், தமிழக அரசு மீது தேவையில்லாமல் மத்தியில் இருப்பவர்கள் குற்றச்சாட்டி வருவதாக கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com