Arunraj | GK | ஓசூர் GH-ல் அமைச்சர் அருண்ராஜ் திடீர் ஆய்வு.. பதறிய அதிகாரிகள்

ஓசூர் GH-ல் அமைச்சர் அருண்ராஜ் திடீர் ஆய்வு.. பதறிய அதிகாரிகள்

Arunraj | GK | ஓசூர் GH-ல் அமைச்சர் அருண்ராஜ் திடீர் ஆய்வு.. பதறிய அதிகாரிகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் மேற்கொண்டார்... அந்த காட்சிகளை பார்க்கலாம்... அப்போது அவர் மருத்துவமனையில் நோயாளிகளை பார்வையிட்டு மருத்துவர்கள் எவ்வாறு சிகிச்சை அளிக்கிறார்கள் என கேட்டறிந்தார். ஓசூரில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையின் பல்வேறு சிகிச்சை பிரிவுகளை அமைச்சர் அருண்ராஜ் ஆய்வு செய்தார். மருத்துவமனையில் உள்ள கழிவறைகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, அதிகாரிகளிடம் குறைகளை சுட்டிக்காட்டினார். குறைபாடுகளை உடனடியாக சரிசெய்யுமாறு, அரசு மருத்துவமனை நிர்வாகத்தினரை அமைச்சர் அறிவுறுத்தினார். ஓசூர் அரசு மருத்துவமனையில், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறையை சரி செய்யுமாறு அமைச்சரிடம் மருத்துவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com