எம்.ஜி.ஆரோட ஆத்மா சாந்தி அடையலனு ஓட்டப்பட்டுள்ள போஸ்டர்
எம்.ஜி.ஆரோட ஆத்மா சாந்தி அடையலனு ஓட்டப்பட்டுள்ள போஸ்டர் இப்ப ரத்தத்தின் ரத்தங்களோட BP-ய எகிற வெச்சிருக்கு... பிரிந்து சென்ற உடன்பிறப்புகள் மீண்டும் நேர் வழி நின்று ஓர் வழி சென்றால் தான் புரட்சி தலைவரோட ஆத்மா சாந்தி அடையுமா ?
அரசியலானலும் சரி.. இல்ல, சினிமா ஆனாலும் சரி.. அதுல சக்ஸஸ்ஃபுல்லாகனும் நினைக்குற எல்லாருக்கும் ரோல்மாடல்னா அது எம்.ஜி.ஆர் மட்டும் தான்.
இவரோட நாடி நரம்பு எல்லாத்துலயும் மக்களுக்கு நல்லது பண்ணனும் என்ற எண்ணம் ஊறிப்போயிருந்தது.
Infact, புரட்சிதலைவர். எம்.ஜி.ஆர் அரசியல்ல இருந்து சினிமாவுக்கு வந்தார்னு சொல்றத விட, அவரோட மாஸ்ஸான அரசியல் என்ட்ரிக்கு சினிமாவ ஒரு ஆயுதமா பயன்படுத்திகிட்டார்னு சொல்றதுதான் சரியா இருக்கு.
எம்.ஜி.ஆர் அவர் நடிச்ச படங்கள் மூலமா அவரோட கொள்கைகள ரசிகர்கள் மனசுல ஆழமா பதியவெச்சாரு.
அரசியல் களத்துல அவர் சந்திக்கிற சவால்களுக்கும், துரோகத்துக்குமான விடை அவரோட திரைப்படத்துலயும் எதிரொலிச்சது.
என்னடா எம்.ஜி.ஆர் ஹிட்ஸ் மாதிரி க்ரைம் ஸ்டோரிலயும் பாட்டவே போடுறீங்களேன்னு யோசிக்கிறீங்களா ?
இந்த பாடல் ஒவ்வொன்னையும் டிகோடிங் பண்ண ஆரம்பிச்சோம்னா அதுல அழமான அரசியல் இருக்கும்.
இன்னைக்கு இருக்குற 2கே கிட்ஸ்க்கு வேணும்னா எம்.ஜி.ஆர் பாடல்கள்லயும், படங்கள்லயும் உள்ள குறீயிடுகள் புரியாம இருக்களாம். ஆனா, இன்னைக்கு உள்ள சீனியர் சிட்டிசன்ஸ் எல்லாருக்கும் இந்த ஒவ்வொரு படத்துலயும், ஏன் டூயட் பாடல்கள்லயும் கூட “எம்.ஜி.ஆர் யார்ரா Attack பண்ணாரு, யார்ரா டாக்கெட் பண்ணாருன்ற தக்லைஃப் சம்பவங்கள விரல் நுனில வெச்சிருப்பாங்க.
இப்படி ஜனரஞ்சகமா அரசியல் கருத்துகள கொண்டு சேர்த்ததால தான் எம்.ஜி.ஆர்ர இன்னைக்கும் அவங்க வீட்டு புள்ளையாவே பார்க்குறாங்க, இதய தெய்வமா நினைச்சு கொண்டாடுறாங்க.
இப்படி ராபகலா எம்.ஜி.ஆர் ஓடியாடி உருவாக்கின அதிமுக என்கிற மாபெரும் கோட்டைய, ஜெயலலிதா அவர்களுடைய மறைவிற்கு பிறகு சிலர் அவங்களோட சுயநலனுக்காக சல்லிசல்லியா நொறுக்கிட்டு வர்றாங்கன்ற ஆதங்கத்த இப்ப போஸ்டர் ஓட்டி வெளிபடுத்தி இருக்காரு அந்த கட்சிய சேர்ந்த ஒரு ரத்தத்தின் ரத்தம்.
எம்.ஜி.ஆர் ஆத்மா சாந்தி அடையவில்லைனு கொட்ட எழுத்துல கோவையோட முக்கிய சாலைகள்ல ஓட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் இப்ப பலரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வெச்சிருக்கு.
இந்த செயல தன்னெழுச்சிய செஞ்ச ரத்தத்தின் ரத்தத்தோட பேரு ஜிம். சுகுமாறன்.
எம்.ஜி.ஆர் கோவைல பிரச்சாரம் மேற்கொண்டப்போ அவருக்கு பாடிகாட்டா போனேன்னு தன்னை அறிமுகப்படுத்திகொள்ள கூடிய ஜிம்.சுகுமாறோட செயல்ல பார்த்ததும், ரைட்டு இது ஏதோ சுய விளம்பரமா இருக்குமோன்னு தான் எல்லாரும் நினைச்சிருக்காங்க.
ஆனா, இப்ப நான் யாரோட ஆதரவாளரும் கிடையாது ஆனா, உடம்புல உசுர் இருக்குற வரைக்கும் அதிமுக அனுதாபிய இருப்பேன்னு சூடம் ஏற்றி சத்தியம் பண்ணாத குறைய சொல்றாரு ஜிம்.சுகுமாறன்.
அத்திகடவு விழால எம்.ஜி.ஆர் ஜெயலிலதா புகைப்படம் இல்லாத போதும் அதுல எடப்பாடி பழனிச்சாமி கலந்துகிட்டதும் சரியில்ல, அதே மாதிரி பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் எல்லாரும் போடுற சண்டையும் சரியில்லன்னு ஒருமனதா எல்லாரையும் அட்டாக் பண்ணி தன்னோட ஆதங்கத்தையும், விசுவாசத்தையும் கொட்டி தீர்த்து இருக்காரு.
அதிமுக அதிகாரப்பூர்வமா இப்போ எடப்பாடி பழனிச்சாமி அவர்களோட தலைமையில இருந்தாலும், அதுல இருந்து நீக்கப்பட்ட சசிகலா, டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் போன்றவர்களும் தொடர்ந்து தலைமைகழகத்துடைய நீக்கம் செல்லாதுனு முறையிட்டுட்டு வர்றாங்க. அதுமட்டுமில்லாம துரோகிகள வெளிய அனுப்பிட்டு ஒன்றுப்பட்ட அதிமுகவ உருவாக்கனும்னு தொடர்ந்து சமாதான பேச்சுவார்த்தைக்கும் தூது அனுப்பிட்டு இருக்காங்க.
இந்த சூழல்ல அதிமுகல உள்ள மூத்த தலைவர் செங்கோட்டையனும், முன்னாள் அமைச்சர் கோகுலா இந்திரா அவர்களும் சமீபத்துல தலைமையோட செயல்பாடுகள் மீது அவங்களோட அதிருப்திய வெளிபடுத்தி இருந்தது அடிமட்ட தொண்டர்கள லேசா ஆட்டம் காணவெச்சது. ஏற்கனவே உடைஞ்சது பத்தாதா ? இன்னும் புதுசு புதுசா... தினுசு தினுசா கிளம்புறாங்களேனு தொண்டர்கள கவலை அடையவும் வெச்சது.
இந்த சூழல்ல அதிமுகவோட சீனியர் அனுதாபி சுகுமாறன், பிரிந்த தலைவர்கள் மீண்டும் ஒன்றினைஞ்சா தான் எம்.ஜி.ஆரோட ஆத்மா சாந்தி அடையும்னு ஒரு மிகப்பெரிய குண்ட தூக்கிப்போட்டு பகீர் கிளப்பி இருக்காரு.
அதுமட்டுமில்லாம, எம்.ஜி.ஆர்ரோட ஆத்மா தன்னிடம் பேசுறதாவும் திகில் கிளப்புறாரு சுகுமாறன்.
எம்.ஜி.ஆரோட நாளை நமதே திரைப்படத்துல இப்படி தான் உடன்பிறந்த ரத்தத்தின் ரத்தங்கள் மூன்று பேர் சூழ்நிலை காரணமா பிரிஞ்சி போய்டுவாங்க.
சினிமால அவங்க எல்லாரையும் ஒரு பாடல் ஒன்றினைக்கிற மாதிரி, தற்போது, பிரிந்த தலைவர்கள ஒன்றிணைக்க சீனியர் அனுதாபிகளும், எம்.ஜி.ஆரின் ஆன்மாவும் எடுத்துவரக்கூடிய இந்த முயற்சிகள் ஒன்றுப்பட்ட அதிமுகவுக்கு அடிதளம் போடுமா ? அப்படிங்குறத நாம பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.